பெருந்தொற்று காரணமாக உலகளவில் மொத்தம் 336.8 மில்லியன் ஆயுள் ஆண்டுகள் இழக்கப் பட்டுள்ளன.
உலகளவில், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 14.9 மில்லியன் அதிகமான இறப்புகள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
முக்கிய சுகாதார குறிகாட்டிகளில் ஒன்றான சுகாதார ரீதியான முன்னேற்றத்தில், 2015 ஆம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க அளவில் தடைப்பட்டுள்ளது
தொற்று நோய் அல்லாத நோய்கள் (NCD) மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் அச்சுறுத்தலையும் உலக நாடுகள் எதிர்கொண்டு வருகிறது.
2000 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகளாவிய பேறுகால இறப்பு விகிதத்தின் வருடாந்திர குறைவு விகிதமானது (ARR) 2.7 சதவீதமாக இருந்தது.
3.2 சதவீதமாக இருந்த (2000-2009) பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தின் வருடாந்திர குறைவு விகிதமானது 2.2 சதவீதமாக (2010-2021) குறைந்துள்ளது.
2000 ஆம் ஆண்டில், உலகளாவிய மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன் கூட்டிய இறப்பு ஆகியவை காரணமாக இழக்கப்பட்ட ஆயுட்காலங்களில் (1.3 பில்லியன் ஆயுள் ஆண்டுகள்) 47 சதவீத இழப்புகள் ஆனது தொற்று நோய் அல்லாத நோய்கள் காரணமாக ஏற்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டிற்குள், தொற்று நோய் அல்லாத நோய்கள் 63 சதவீதம் இழப்பினை (1.6 பில்லியன் ஆயுள் ஆண்டுகள்) ஏற்படுத்தியது.