உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்
May 27 , 2022
788 days
360
- உலக சுகாதார அமைப்பானது, டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸை உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநராக இரண்டாவது முறையாக மீண்டும் நியமித்துள்ளது.
- சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற 75வது உலக சுகாதார அமைப்பின் போது அவரது மறுநியமனம் குறித்து உறுதி செய்யப்பட்டது.
- இவர் தான் இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஒரே வேட்பாளர் ஆவார்.
- டாக்டர் டெட்ரோஸ் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- உலக சுகாதார அமைப்பில் சேருவதற்கு முன்பு, இவர் எத்தியோப்பியாவில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-627.jpg)
Post Views:
360