இந்திய மருத்துவ ஆராய்ச்சி ( Indian Council of Medical Research – ICMR ) அமைப்பின் பொது இயக்குநராக உள்ள சௌமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் (WHO – World Health Organization) திட்டங்களுக்கான துணைப் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சென்னையிலுள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தியாவில் காசநோய் ஆராய்ச்சி மீதான கவனம் அதிகரிக்க காரணமான இவர், காசநோய் ஆராய்ச்சிக்காக “இந்திய காசநோய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்” ( India TB Research and Development Corporation – ITRDC ) எனும் காசநோய் மீதான ஆராய்ச்சிக்கு என ஓர் கூட்டமைப்பை உண்டாக்கினார்.
காசநோயை ஒழிக்க நோய்கண்டறிதல் சாதனங்கள், தடுப்பூசிகள் மருந்துகள் போன்றவற்றை உருவாக்க தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களை ஒருங்கிணைத்தலை இவ்வமைப்பு நோக்கமாக கொண்டுள்ளது.