TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பின் பூஞ்சை முன்னுரிமை நோய்க்கிருமிகளின் பட்டியல்

October 31 , 2022 630 days 268 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) பூஞ்சை தொற்றுகள் குறித்த "முன்னுரிமை நோய்க் கிருமிகள்" எனப்படும் முதல் பட்டியலை வெளியிட்டது.
  • மனித ஆரோக்கியத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை விளைவிக்கின்ற பூஞ்சை முன்னுரிமை நோய்க்கிருமிகளின் பட்டியலில் (FPPL) 19 பூஞ்சைகள் அடங்கும்.
  • உலக சுகாதார அமைப்பின் பூஞ்சை முன்னுரிமை நோய்க்கிருமிகளின் பட்டியலானது மூன்று பிரிவுகளாக ‘முக்கியமானது, உயர்தரம் மற்றும் நடுத்தர முன்னுரிமை கொண்டவை’ ஆகிய வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பூஞ்சை நோய்க்கிருமிகள் பொது சுகாதாரம் மற்றும்/அல்லது வளர்ந்து வரும் பூஞ்சை எதிர்ப்புத் திறன் சார்ந்த ஆபத்தின் அடிப்படையில் ஒவ்வொரு முன்னுரிமை பிரிவிலும் தரவரிசைப் படுத்தப் படுகின்றன.
  • முக்கிய முன்னுரிமை நோய்க் கிருமிகள் குழுவில், அதிக மருந்து-எதிர்ப்புத் திறன் கொண்ட பூஞ்சையான கேண்டிடா ஆரிஸ், கிரிப்டோகாக்கஸ் நியோஃபார்மன்ஸ், ஆஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ், மற்றும் கேண்டிடா ஆல்பிகன்ஸ் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்