TNPSC Thervupettagam

உலக சுகாதார சபை மாநாடு

June 2 , 2018 2368 days 1047 0
  • 71வது உலக சுகாதார சபை மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடந்தது.
  • இம்மாநாடு டிஜிட்டல் சுகாதாரத்தின் மீதான தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த தீர்மானத்தை 20 நாடுகள் வழி மொழிதலுடன் இந்தியா முன்மொழிந்தது.
  • டிஜிட்டல் சுகாதாரத் தொழில்நுட்பம் அனைவருக்குமான சுகாதார சேவையை ஏற்படுத்துவதிலும் மருத்துவ சேவைகளின் அணுகுதல், தரம் மற்றும் மலிவான விலை ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் மிகுந்த ஆற்றலை கொண்டுள்ளது.
  • இத்தொழில்நுட்பம் ஆழ்ந்த இயந்திர கற்றல் (Deep Machine Learning), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இணைய தள விவகாரங்கள் (Internt of Things) மற்றும் வளர்ந்து வரும் துறையான ஜீனோமிக்ஸ் (Genomics) போன்ற புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும்.
  • உலக சுகாதார சபை 1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி நிறுவப்பட்டு, முன்பு உலக நாடுகள் சங்கத்தால் அமைக்கப்பட்டு இருந்து சுகாதார நிறுவனத்தின் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றது.
  • இதன் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.
  • தனது 194 உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகின்ற உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு அமைப்பே உலக சுகாதார மாநாடு ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் கொடி குணப்படுத்துவதின் சின்னமாக அசிலிபியஸ் தூணைக் (Rod of Asclepius) கொண்டுள்ளது.
  • உறுப்பினர் நாடுகளின் அனைத்து சுகாதார அமைச்சர்களையும் பங்கேற்பாளர்களாக கொண்ட இம்மாநாடு சுகாதார கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்புகளில் உலகின் உயர்ந்த அமைப்பாக விளங்குகின்றது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகமான ஜெனீவாவில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் உலக சுகாதார மாநாட்டின் உறுப்பினர்கள் வருடாந்திர சந்திப்பினை நடத்துகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்