1948 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு நிறுவப்பட்டதை இந்தத் தினம் நினைவு கூருகிறது.
இந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு தனது 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடச் செய்கிறது.
1945 ஏப்ரல் மாதத்தில், ஐக்கிய நாடுகள் சபையை நிறுவுவதற்காக உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒன்று கூடினர்.
இந்தக் கூட்டத்தில், பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உலக நாடுகளின் சுகாதார நலனுக்காக வேண்டிப் பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் உலகளாவிய அமைப்பினை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
இந்த அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது.
இது உலகம் முழுவதும் ஆறு பிராந்திய மற்றும் 150 நாடு சார்ந்த அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
இது 75வது ஆண்டு விழா என்பதால், "அனைவருக்குமான சுகாதார நலம்" என்ற ஒரு கருத்துருவினை உலக சுகாதார அமைப்பானது தேர்ந்தெடுத்துள்ளது.