உலக சுகாதாரத்தினுடைய முக்கியத்துவத்தை நோக்கி வெகுஜன மக்களிடையே கவனத்தை கொண்டு வருவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation-WHO) தலைமையின் கீழ் ஆண்டுதோறும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் (World Health Day) கொண்டாடப்படுகின்றது.
2018-ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார தினத்தின் கருத்துரு “உலகளாவிய சுகாதார பாதுகாப்பு; அனைவருக்கும், அனைத்து இடத்திலும்” (Universal Health Coverage: everyone, everywhere).
1948-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர நிறுவன தினத்தைக் குறிப்பதற்காக உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகின்றது.
1948-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் அவை முதன்முதலாக கூடியது. பின் அது ஏப்ரல் 7ஆம் தேதியை உலக சுகாதார தினமாக கொண்டாட முடிவு செய்தது.
1950-ஆம் ஆண்டு உலக சுகாதார தினம் முதன்முதலாக உலக அளவில் கொண்டாடப்பட்டது.