TNPSC Thervupettagam

உலக சுகாதார தினம்

April 7 , 2019 2060 days 625 0
  • உலக சுகாதார நிறுவனத்தின் (WHO - World Health Organization) ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதியன்று உலக சுகாதார தினமானது சர்வதேச சுகாதார விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று WHO உருவாக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டானது உலக சுகாதார நிறுவனத்தின் 70-வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் நிறைவைக் குறிக்கிறது.
  • இந்த ஆண்டின் உலக சுகாதார தினத்தின் கருத்துருவானது “அனைவருக்கும் சுகாதாரம்” என்பதாகும்.
  • இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரத்தை நோக்கியப் பணியானது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும் உள்ளடக்கியது.
  • இந்தத் திட்டமானது சமுதாயத்தில் சமூகப் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர்களின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்ச ரூபாய் அளவிலான மருத்துவ சேவை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டில் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரத்தை அடைவதற்கு முயற்சிக்க அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்