TNPSC Thervupettagam

உலக சுகாதார நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதர் மில்கா சிங்

August 13 , 2017 2717 days 1129 0
  • தென் கிழக்கு ஆசியப் பிராந்தியப் பகுதிகளில் , உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் நல்லெண்ணத் தூதராக மில்கா சிங்கை உலக சுகாதார நிறுவனம் நியமித்துள்ளது.
  • ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் உண்டாகும் தொற்றா நோய்களை (Non-Communicable Diseases) கட்டுப்படுத்தவும் , தடுக்கவும் உலக சுகாதார நிறுவனம் திட்டங்களை வகுத்துள்ளது.
  • இத்திட்டமானது 2025 ஆம் ஆண்டுக்குள் போதிய உடல் உழைப்பின்மையை 10 சதவீதம் அளவும், தொற்றாத நோய் தாக்குதல்களை 25 சதவீதம் வரையும் குறைக்க முற்படுகிறது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்த திட்டத்தினை மில்காசிங் ஊக்குவிப்பார்.
  • மில்கா சிங் காமன்வெல்த் போட்டிகளிலும், ஆசியன் விளையாட்டுகளிலும் இந்தியாவுக்குப் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளார். ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்படும் இவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்