TNPSC Thervupettagam

உலக சுகாதார நிறுவனத்தின் காற்று மாசு மற்றும் சுகாதாரத்தின் மீதான உலகளாவிய மாநாடு

November 6 , 2018 2082 days 668 0
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை உலக சுகாதார அமைப்பின் முதலாவது காற்று மாசு மற்றும் சுகாதாரத்தின் மீதான உலகளாவிய மாநாடு ஜெனிவாவில் நடைபெற்றது.
  • இம்மாநாட்டின் கருத்துரு : “காற்றின் தரத்தை உயர்த்துதல், பருவ மாற்றத்தை தடுத்தல் - உயிர்களைக் காத்தல்” என்பதாகும்.
  • இம்மாநாட்டின் நோக்கம் உலகம் முழுவதும் உள்ள உலகளாவிய, தேசிய மற்றும் உள்ளூர் பங்குதாரர்களை தூய காற்றிற்காகவும், சிறந்த சுகாதாரத்திற்காகவும் தங்கள் அறிவுத் தகவல்களைப் பகிர்ந்து அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திட ஒன்றுபடுத்திடச் செய்வதாகும்.
  • இந்த மாநாடு
    • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பு
    • உலக வானிலை அமைப்பு
    • குறைந்த ஆயுட்காலமுடையை பருவநிலை மாசுபடுத்திகளைக் குறைப்பதற்கான பருவநிலை மற்றும் தூய காற்றுக்கான கூட்டணி
    • ஐரோப்பாவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம்
    • உலக வங்கி
    • பருவ நிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு ஒப்பந்தத்தின் செயலகம்

ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்