பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளையோர்களுக்கான சிகிச்சை தொடர்பான மருத்துவ வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் முதல் முறையாக வகுத்துள்ளது.
குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் உடன்படிக்கை மற்றும் பிற மனித உரிமை சாசனங்களை அடிப்படையாகக் கொண்டு, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டிருக்கக்க கூடிய குழந்தைகள் மற்றும் இளையோர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது WHO-வின் இந்த மருத்துவ வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர்களின் பாதுகாப்பு, அவர்களுடைய விருப்பம், பாதிப்புற்ற குழந்தை மற்றும் இளையோர்களின் சுய அதிகாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிப்படைந்து உயிர்பிழைத்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதில் உள்ள இடைவெளியைக் குறைக்க இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சிகிச்சையின் போது அல்லது பிரச்சனைகள் கண்டறியும் பரிசோதனையின் போது அவர்கள் பாலியல் துன்புறுத்துதலுக்கு உள்ளானதனை கண்டுபிடிக்கும் மருத்துவ சேவகர்களுக்கும் அல்லது பாலியல் துன்புறுத்துதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சிசிச்சை அளிக்கும் பொது நல மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற முன்நிலை மருத்துவ சேவகர்களுக்கும் அவர்கள் சிகிச்சை அளிக்கும்போது பின்பற்ற வேண்டிய மருத்துவப் பரிந்துரைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றது.
உலக சுகாதார நிறுவனம்
சர்வதேச அளவில் பொது ஆரோக்கிய நிலையை உறுதிப்படுத்தி ஒருங்கிணைக்கும் ஐ.நா.அவையின் சிறப்பு நிறுவனமே உலக சுகாதார நிறுவனமாகும்.