TNPSC Thervupettagam

உலக சுங்கவரி அமைப்பு – ஆசிய பசிபிக் பகுதிகளின் தலைமை (World Customs organization – WCO)

July 19 , 2018 2225 days 664 0
  • இந்தியா ஜூன் 2020 வரை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஆசிய பசிபிக் பகுதிகளின் உலக சுங்கவரி அமைப்பின் துணைத் தலைவராகியுள்ளது. (பிராந்தியத் தலைமை)
  • இந்த அமைப்பு உறுப்பினர் தகுதியினை ஆறு பகுதிகளில் பகிர்ந்தளித்துள்ளது. இந்த ஒவ்வொரு பகுதியும் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர்களால் WCO-ல் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.

WCO

  • WCO பெல்ஜியமில் உள்ள பிரசல்ஸை தலைமையிடமாகக் கொண்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆகும்.
  • சர்வதேச ஒத்திசைவு அமைப்பு (International Harmonized System - HS), பொருள்களின் பெயரிடுதல், சுங்க மதிப்பீடு மற்றும் தோற்ற விதிகள் மீதான உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization – WTO) ஒப்பந்தங்களின் தொழில்நுட்ப அம்சங்களை நிர்வாகம் செய்தல் ஆகியவற்றை WCO நிர்வகிக்கிறது.
  • உலக வர்த்தகத்தில் தோராயமாக 98 சதவிகிதத்தில் உலகெங்கிலும் செயல்படும் 182 நாடுகளின் சுங்க நிர்வாகத்தினை WCO பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்