TNPSC Thervupettagam

உலக சுங்க வரி விவரங்கள் 2024

August 4 , 2024 111 days 173 0
  • உலக வர்த்தக அமைப்பு (WTO), சர்வதேச வர்த்தக மையம் (ITC) மற்றும் UN வர்த்தகம் மற்றும் மேம்பாடு (UNCTAD) அமைப்பு ஆகியவற்றால் 2024 ஆம் ஆண்டு உலக சுங்க வரி விவரங்கள் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • உலக வர்த்தக அமைப்பு (WTO) நாடுகளில் இறக்குமதி குவிப்பு தடுப்பு வரிகளைத் அறிமுகப் படுத்தி, அதனை விதிப்பதில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது நாடாக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் சுங்க வரிகள் அல்லாத நடவடிக்கைகளின் பயன்பாடு அதிகரித்த போதிலும், 2022 ஆம் ஆண்டில் 18.1 சதவீதமாக இருந்த இந்தியாவின் சராசரி சுங்க வரிகள் 17 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியா 45 இறக்குமதி குவிப்புத் தடுப்பு விசாரணைகளைத் தொடங்கி, 14 வழக்குகளில் வரிகளை விதித்தது.
  • ஆனால் அமெரிக்கா சுமார் 64 விசாரணைகளைத் தொடங்கி 14 வழக்குகளில் கூடுதல் வரிகளை விதித்தது.
  • இந்தியாவில் மொத்தம் 133 என்ற அளவில் இறக்குமதி குவிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டு, 418 தயாரிப்புகள் மீது வரி விதிக்கின்றது.
  • 2022 ஆம் ஆண்டில், இந்தியா 29 இறக்குமதி குவிப்பு தடுப்பு விசாரணைகளுடன் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர் நாடுகளுள் முன்னிலையில் உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 14.7 சதவீதமாக இருந்த வேளாண்மை சாராத இறக்குமதிக்கான சராசரி சுங்க வரியானது 2023 ஆம் ஆண்டில் 13.5 சதவீதமாக குறைந்துள்ளது.
  • வேளாண் சார் சுங்க வரிகளும் 39.6 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்