1972 ஆம் ஆண்டு ஜுன் 05 முதல் 16 வரை சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மனித சுற்றுச்சூழல் குறித்த ஐக்கிய நாடுகள் கருத்தரங்கின் முதலாவது தினத்தைக் குறிப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தை ஜெர்மனியுடன் இணைந்து கொலம்பியா நாடானது தலைமையேற்று நடத்துகின்றது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்டாடுதல்” என்பதாகும்.
2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஹவாயில் உள்ள மௌனா லா ஆய்வகத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வின்படி கார்பன் டை ஆக்ஸைடு (CO2) உமிழ்வுகள் 417 ppm (Parts per million) என்ற அளவை எட்டியுள்ளது.
இது 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 414.8 ppm என்ற CO2 அளவை விட அதிகமாகும்.