TNPSC Thervupettagam

உலக சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 5

June 5 , 2019 2001 days 2014 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் (WED - World Environment Day) அனுசரிக்கப்படுகின்றது.
  • WED ஆனது 1972 ஆம் ஆண்டு மனித சுற்றுச் சூழல் மீதான ஸ்டாக்ஹோல்ம் கருத்தரங்கின் முதல் நாளன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உருவாக்கப்பட்டது.
  • இது 1974 ஆம் ஆண்டில் “ஒரே ஒரு பூமி” என்ற கருத்துருவுடன் முதன் முறையாகக் கடைபிடிக்கப்பட்டது.
  • இது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு சர்வதேச தினமாகும்.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “காற்று மாசுபாடு” என்பதாகும். இந்த ஆண்டின் இத்தினத்தை சீனா தலைமையேற்று நடத்துகின்றது.
  • 2018 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “நெகிழி மாசுப்பாடைக் கட்டுப்படுத்து” என்பதாகும். இத்தினத்தை இந்தியா தலைமையேற்று நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்