TNPSC Thervupettagam

உலக சுற்றுச்சூழல் தினம் (WED) - ஜூன் 05

June 8 , 2022 810 days 389 0
  • இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் (UNEP) ஏற்பாடு செய்யப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டின் இத்தினமானது, 50வது உலக சுற்றுச்சூழல் தினத்தினைக் குறிக்கிறது.
  • இந்த ஆண்டு இத்தினத்தினை ஸ்வீடன் நடத்துவதோடு இதன் கருத்துரு, 'ஒரே ஒரு பூமி' என்பதாகும்.
  • ஒரே ஒரு பூமி என்பது 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டின் ஒரு முழக்கமாக இருந்தது.
  • மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு அல்லது ஸ்டாக்ஹோம் மாநாடு 1972 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • சுற்றுச்சூழலை முக்கிய நிகழ்ச்சி நிரலாகக் கொண்ட முதல் உலக மாநாடு இதுவாகும்.
  • இந்த மாநாடானது, "ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கான ஒரு உரிமையை" ஒரு "அடிப்படை மனித உரிமை" என்று அறிவித்தது.
  • இதன் மூலம், உலக சுற்றுச்சூழல் தினம் என்ற கருத்தானது முறைப்படுத்தப்பட்டது.
  • மாரிஸ் ஸ்ட்ராங்க் என்பவரால் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினை உருவாக்கவும் இந்த மாநாடு வழி வகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்