ஜூன் 5 அன்று கொண்டாடப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தை இவ்வாண்டு உலக ஒருங்கிணைப்பாளராக (Global Host) இந்தியா நடத்த உள்ளது.
இதற்கான நோக்க கடிதம் ஒன்றில் (Letter Of Intent-LOI) இந்தியாவும், ஐ.நா சுற்றுச் சூழல் அமைப்பும் (UN Environment) கையெழுத்திட்டுள்ளன.
“பிளாஸ்டிக் மாசுபாடுகளை வெல்லுதல்” (Beat Plastic Pollution) என்பது இவ்வாண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருத்துருவாகும்.
2018-ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினம் நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்து அரசு அமைப்புகளிலும் கொண்டாடப்பட உள்ளது.
இதனோடு டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் ஒரு வார கால சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பிரச்சாரமும், மாசுபாடு தணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு மனித சுற்றுச்சூழல் மீதான ஐ.நா மாநாட்டின் தொடக்கத்தினை குறிக்கும் விதமாக ஐ.நா பொது அவையால் உலக சுற்றுச்சூழல் தினம் நிறுவப்பட்டது.