உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
இந்த வருடத்தின் கருப்பொருளானது ‘சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மாற்றம்’ (Tourism and the Digital Transformation) என்பதாகும்.
சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் & பொருளாதார மதிப்பு ஆகியவற்றைக் குறித்து சர்வதேச சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக இத்தின அனுசரிப்பு கொண்டுள்ளது.
உலக சுற்றுலா தினமானது, 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று ஐ.நா. சுற்றுலா அமைப்பின் (UNWTO – United Nations World Tourism Organization) விதிகளை ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளைக் குறிக்கிறது.