TNPSC Thervupettagam

உலக சுற்றுலா நெகிழ்திறன் தினம் - பிப்ரவரி 17

February 21 , 2023 550 days 204 0
  • சுற்றுலா நெகிழ்திறனின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையானது 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 ஆம் தேதியன்று இந்தத் தினத்தினை அறிவித்தது.
  • இந்தத் தினத்தின் நோக்கமானது சுற்றுலா நெகிழ்திறன் பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்குவதாகும்.
  • முதல் உலக சுற்றுலா நெகிழ்திறன் தினமானது இந்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது.
  • சுற்றுலா நெகிழ்திறன் என்பது ஒரு சுற்றுலாத் தலத்தில் நிலவும் நெருக்கடிகளை எதிர் கொண்டு அவற்றிலிருந்து விரைவாக மீள்வதற்கான திறனைக் குறிக்கிறது.
  • 2019 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் சுற்றுலாத் துறையில் 333 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
  • 2020 ஆம் ஆண்டில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8% அளவில் பங்களிப்பினை வழங்கச் செய்வதோடு மொத்த வேலை வாய்ப்புகளில் அது 8 சதவீதப் பங்களிப்பினை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்