சுற்றுலா மற்றும் கலாச்சாரம் மீதான ஐ.நா உலக சுற்றுலா நிறுவனம் மற்றும் யுனெஸ்கோவின் இரண்டாவது உலக மாநாடு அண்மையில் ஓமன் சுல்தானியத்தின் தலைநகரான மஸ்கட்டில் நடைபெற்றது.
சுற்றுலா நிர்வாகம், சுற்றுலா மேம்பாடு, பாரம்பரிய கலாச்சார இடங்களின் பாதுகாப்பு, புத்தாக்கம் மற்றும் நகர மேம்பாட்டில் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவின் பங்கு, நீடித்த வளர்ச்சிக்கான வாகனமாக சுற்றுலாவில் கலாச்சார கூறுகளை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு தலைப்புகளின் மீது விவாதிப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
உலக நாடுகளின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர்கள், தனியார் துறை பங்குதாரர்கள், நிபுணர்கள் பங்கு பெறும் இம்மாநாட்டில் சுற்றுலா மற்றும் கலாச்சார துறைகளில் அவர்களிடையே கூட்டிணைவை ஏற்படுத்தி, பின் அதனை பலப்படுத்தி அதன் மூலம் ஐ.நா.வின் 2030-ஆம் ஆண்டிற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான அவர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது.
இதற்கு முந்தைய முதலாவது UNWTO/UNESCO உலக சுற்றுலா மற்றும் கலாச்சார மாநாடு 2015-ல் கம்போடியாவின் சியேம் ரீப் (Siem Reap) நகரில் நடைபெற்றது.
நீடித்த வளர்ச்சிக்காக சுற்றுலா மற்றும் கலாச்சார துறைகளில் உள்ள நற்விளைவுகளை வெளிக்கொண்டுவர கூட்டிணைந்து நல்லிணக்கத்தோடு செயல்படுவதற்கான சியேம் ரீப் பிரகடனம் (Siem Reap proclamation) ஏற்றுக் கொள்ளப்பட்டது.
UNWTO
UNWTO – United Nations World Tourism Organisation ஒரு பொறுப்பான, நீடித்த, உலகளாவிய மற்றும் அணுகிடத்தக்க சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஐ.நா.நிறுவனமாகும்.
இதன் தலைமையகம் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் அமைந்துள்ளது.
இது 1975 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இந்தியா உட்பட 158 நாடுகள் UNWTO வில் உறுப்பினராக உள்ளன.
மேலும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான சுற்றுலாவின் பங்கை அதிகரிக்கவும், சுற்றுலாவால் உண்டாகும் சாத்தியமான எதிர்மறை தாக்கங்களை குறைக்கவும், சுற்றுலாவிற்கான நெறிமுறைகளின் உலகளாவிய தொகுப்பை அமல்படுத்துவதற்கு (Global Code of ethics for Tourism) ஊக்கமளிக்கவும் UNWTO செயல்பட்டு வருகின்றது.