TNPSC Thervupettagam

உலக சூரிய சக்தி அறிக்கைத் தொடர் - 3வது பதிப்பு

November 12 , 2024 10 days 94 0
  • 3வது உலக சூரிய சக்தி அறிக்கைத் தொடரானது சமீபத்தில் சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியின் 7வது கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
  • உலக சூரிய சக்தி சந்தை அறிக்கை, உலக முதலீட்டு அறிக்கை, உலகத் தொழில்நுட்ப அறிக்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் மீதான தயார் நிலை மதிப்பீடு ஆகிய 4 அறிக்கைகள் புதிதாக வெளியிடப் பட்டுள்ளன.
  • உலக சூரிய சக்தி சந்தை அறிக்கையானது, 2000 ஆம் ஆண்டில் 1.22 GW ஆக இருந்த உலகளாவிய உற்பத்தி திறன் ஆனது 2023 ஆம் ஆண்டில் 1,418.97 GW ஆக உயர்ந்து உள்ளதுடன் அதிகபட்ச சூரிய சக்தி அதிகரிப்பினை வெளிப்படுத்துகிறது.
  • சமீபத்திய உலக முதலீட்டு அறிக்கையானது, 2018 ஆம் ஆண்டில் சுமார் 2.4 டிரில்லியன் டாலராக இருந்த ஆற்றல் முதலீடுகள் ஆனது 2024 ஆம் ஆண்டில் சுமார் 3.1 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதுடன் நிலையான ஆற்றலை நோக்கிய பெரும் உலகளாவிய மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • உலகத் தொழில்நுட்ப அறிக்கையின் சிறப்பம்சங்களில் சூரிய ஒளி மின்னழுத்த (PV) தொகுதிகளில் ஒரு சாதனை அளவிலான சுமார் 24.9% செயல்திறன், 2004 ஆம் ஆண்டு முதல் சிலிக்கான் பயன்பாட்டில் 88% குறைப்பு ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்