TNPSC Thervupettagam

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் – மே 08

May 11 , 2021 1206 days 429 0
  • சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளானது அனுசரிக்கப்படுகிறது.
  • மக்களின் இன்னல்களைக் குறைப்பதற்கும் சுதந்திரம், மனிதநேயம், வேற்றுமை காட்டாதிருத்தல், பொதுவுடைமை, ஒற்றுமை மற்றும் நடுநிலைமை ஆகியவற்றுடன் கூடிய  கண்ணியமான வாழ்க்கையைப் பெற அவர்களுக்கு உதவுவதற்கும் வேண்டி இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Unstoppable” (தடுத்து நிறுத்த முடியாதது) என்பது ஆகும்.
  • மேலும் இந்த தினமானது ஹென்றி டியூனந்தின் (Henry Dunant) பிறந்த நாளினையும் (மே 08, 1828) குறிக்கிறது.
  • ஹென்றி டியூனந்த் என்பவர் சர்வதேச செஞ்சிலுவைக் குழு அமைப்பின் (International Committee of Red Cross – ICRC) நிறுவனராவார்.
  • இவர் முதலாவது அமைதிக்கான நோபல்  பரிசினைப் பெற்றவராவார்.
  • ICRC  அமைப்பின் தலைமையகமானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்