காது கேளாமை மற்றும் செவித்திறன் இழப்பைத் தடுப்பது மற்றும் உலகம் முழுவதும் காது மற்றும் செவிப்புலன் பராமரிப்பை மேம்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் என்பது முதன்முதலில் 2007 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப் பட்டது.
முன்னதாக, இந்த நாள் சர்வதேச காது பராமரிப்புத் தினமாக அங்கீகரிக்கப்பட்டது.
2016 ஆண்டிற்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பானது இத்தினத்தின் பெயரை உலக செவித் திறன் தினமாக மாற்றியது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "மாறும் மனநிலைகள்: அனைவருக்குமான காது மற்றும் செவிப்புலன் நலனை நனவாக்குதல்" என்பதாகும்.