ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 அன்று சைவ உணவிற்கு மாறுவதன் மூலம் அடையும் பயன்களை நினைவு கூறும் விதமாக உலக சைவ உணவுப் பழக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினம் 1994 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. உலக சைவ உணவுப் பழக்க தினமானது கண்காட்சிகள், கருத்தரங்கங்கள், பொது விவாதங்கள், செயல் விளக்கங்கள் ஆகியவற்றின் மூலம் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது தனி நபர்களுக்கு சைவ உணவுப் பழக்க வாழ்க்கைமுறை பற்றியும், சைவ உணவுப் பழக்கத்தின் மதிப்பு மற்றும் அதன் பயன்கள் குறித்து நண்பர்களிடம் விவாதித்து, எடுத்துரைத்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.