- வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஹைதராபாத்தில் தகவல் தொழில் நுட்பம் மீதான உலக கருத்தரங்கை இந்தியப் பிரதமர் துவங்கி வைத்துள்ளார்.
- தெலுங்கானா மாநில அரசு, நாஸ்காம் அமைப்பு மற்றும் உலக தகவல் தொழில்நுட்ப சேவை கூட்டணி (World Information Technology Service Alliance – WITSA) ஆகிவற்றின் கூட்டிணைவுடன் இந்தியா முதல் முறையாக இந்த கருத்தரங்கை நடத்தியுள்ளது.
- இது ஆசியாவில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 2008-ல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இது நடத்தப்பட்டது.
- இந்த கருத்தரங்கின் கருப்பொருள்- “எதிர்கால நிறுவனங்கள்” (Future Enterprises).
- குடியுரிமை பெற்றுள்ள உலகின் முதல் மனித ரோபாவான சவூதி அரேபியாவைச் சேர்ந்த சோபியா ரோபோ இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ளது.
உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரஸ்
- தகவல் தொழிற்நுட்பம் மீதான உலகின் மிகப்பெரிய கருத்தரங்கான இது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
- இதற்கு முன் இக்கருத்தரங்கு “டிஜிட்டல் உலகம்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் 2014 ஆண்டு மெக்சிகோவில் நடத்தப்பட்டது. பின் 2016ஆம் ஆண்டிற்கான மாநாடு பிரேசிலின் பிரேசிலியாவில் நடத்தப்பட்டது.