ஒவ்வொரு ஆண்டும் மே 07 அன்று உலக தடகள விளையாட்டு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது.
இளைஞர்களிடையே விளையாட்டுகளைப் பிரபலமாக்குதல்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தடகள விளையாட்டை முதன்மை விளையாட்டாக ஊக்குவித்தல்.
தடகள விளையாட்டில் புதிய திறமையுள்ளவர்கள் மற்றும் இளைஞர்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல்.
உலகளாவிய தடகளக் கூட்டமைப்பான “சர்வதேச தடகள மன்றக் கூட்டமைப்புகளின்” (International Association of Athletics Federations - IAAF) முன்னாள் தலைவரான பிரைபோ நெபிலோ என்பவர் 1996 ஆம் ஆண்டில் இத்தினத்தைத் தொடங்கி வைத்தார்.