TNPSC Thervupettagam

உலக தண்ணீர் தினம் – மார்ச் 22

March 23 , 2021 1256 days 547 0
  • முதல் உலக தண்ணீர் தினம் 1993 ஆம் ஆண்டில் ஐ.நா.வினால் அறிவிக்கப்பட்டது.
  • UN-Water என்ற அமைப்பு தான் உலக தண்ணீர் தினத்தை தொடங்கி வைத்தது.
  • உலக தண்ணீர் தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் ஐ.நா. உலக தண்ணீர் மேம்பாட்டு (WWDR) அறிக்கை வெளியிடப் படும்.
  • நன்னீர் வள ஆதாரங்களை நிலையான முறையில் மேலாண்மை செய்வதை வலியுறுத்தவே இந்நாள் கடைபிடிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “தண்ணீருக்கு மதிப்பளித்தல்” மற்றும் “தங்களைப் பொருத்தவரை தண்ணீர் என்பது என்ன? என்பது பற்றிய உரையாடல்” ஆகும்.
  • ஒவ்வொரு நாளுக்குமான கருத்துரு, 6வது நிலையான மேம்பாட்டுக் குறிக்கோளின் இலக்குடன் ஒத்துப் போகும் வகையில் தூய்மையான நீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு போன்றவற்றில் அதிக ஈடுபாடு செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்