TNPSC Thervupettagam

உலக தண்ணீர் வாரம் 2023 - ஆகஸ்ட் 20 முதல் 24 வரை

August 25 , 2023 363 days 183 0
  • இது 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஸ்டாக்ஹோம் சர்வதேச தண்ணீர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
  • 1969 ஆம் ஆண்டில், இந்தியாவில் தேசியக் கிராமப்புறக் குடிநீர் வழங்கீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • 1972-73 ஆம் ஆண்டில், இந்தியாவில் துரிதப் படுத்தப்பட்ட வகையிலான கிராமப்புறக் குடிநீர் வழங்கீட்டுத் திட்டம் (ARWS) தொடங்கப்பட்டது.
  • 1991 ஆம் ஆண்டில் இது இராஜீவ் காந்தி தேசியக் குடிநீர் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்த வாரக் கொண்டாட்டத்தின் கருத்துரு, ”மாற்றத்தின் விதைகள்: நீர் சார்ந்த உலகத்திற்கான புதுமையான தீர்வுகள்” என்பதாகும்.
  • 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாரத் நிர்மான் திட்டமானது கிராமப்புறக் குடிநீர் வழங்கீட்டுத் திட்ட அம்சங்களைக் கொண்டிருந்தது.
  • மத்திய அரசானது 2017 ஆம் ஆண்டில், அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை உறுதி செய்யும் ஒரு நோக்கத்துடன் ஹர் கர் ஜல் திட்டத்தினைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்