உலக தற்கொலை தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
இது உலகெங்கிலும் பல்வேறு நடவடிக்கைகளுடன், தற்கொலைகளைத் தடுப்பதற்கு உலகளாவிய அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகளை வழங்குவதற்கான விழிப்புணர்வு நாள் ஆகும்.
இதன் முதலாவது தினக் கொண்டாட்டமானது 2003 இல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது ஆண்டுதோறும் தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம், உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization) மற்றும் மனநலத்திற்கான உலகக் கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து ஒருங்கிணைக்கப் படுகின்றது.
ஒவ்வொரு 40 விநாடிகளிலும் ஒருவர் தற்கொலையினால் தங்களது வாழ்க்கையை இழக்கின்றார்.
2019 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த WHO ஆனது “40 விநாடிகள் நடவடிக்கை” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.