இந்த தினம் ஆனது, 2003 ஆம் ஆண்டில் சர்வதேச தற்கொலை தடுப்புச் சங்கத்தினால் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து நிறுவப்பட்டது.
தற்கொலைகளைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குக் கற்பிப்பதற்கும் விழிப்புணர்வூட்டுவதற்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “செயல்கள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” என்பதாகும்.
ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 700,000 தற்கொலைகள் பதிவு செய்யப் படுகின்றன.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1.64 லட்சம் தற்கொலைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
2020 ஆம் ஆண்டு தற்கொலை வழக்குகளின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும் போது தற்போது ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 6.1 என்ற அதிகளவிலான தற்கொலை விகிதம் பதிவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 11.3 என்ற விகிதத்தில் இருந்த இந்தியாவின் தற்கொலை விகிதமானது, 2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 12 ஆக பதிவு செய்யப் பட்டுள்ளது.