உலக தற்கொலை தடுப்பு தினம் (WSPD - World Suicide Prevention Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
2003 ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்கொலைகளை தடுக்க அர்ப்பணித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல் இதன் நோக்கமாகும்.
உலக தற்கொலை தடுப்பு தினத்தை தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச மன்றமானது (IASP - International Association for Suicide Prevention) மனநலத்திற்கான உலக பெடரேஷனுடன் இணைந்து அனுசரித்தது.
இந்த ஆண்டிற்கான கருத்துருவானது “தற்கொலைகளை தடுப்பதற்கு சேர்ந்து பணியாற்றுதல்” என்பதாகும்.