ஒவ்வொரு ஆண்டும் மே 08 ஆம் தேதி உலகம் முழுவதும் உலக தாலசீமியா நோய் (இரத்த அழிவுச் சோகை) தினம் அனுசரிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவானது, “உலகளவில் தரமான தாலசீமியா சுகாதாரச் சேவைகளை அணுகல் : நோயாளிகளுக்கான மற்றும் நோயாளிகளுடனான உறவுகளைக் கட்டமைத்தல்” என்பதாகும்.
தாலசீமியா நோய், அதனை வரும் முன் காத்தல் மற்றும் அதனைப் பரவாமல் தடுத்தல் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
தாலசீமியா என்பது குறைவான ஹீமோகுளோபினைக் கொண்ட மரபு ரீதியான இரத்தக் கோளாறாகும்.
இது மத்தியத் தரைக்கடல், தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே பொதுவாகக் காணப்படுகின்றது.