சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் உலக திறன் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
2017-ம் ஆண்டிற்கான இந்த திறன் தரவரிசை பட்டியலில் 63 நாடுகளுள் இந்தியா 51-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த தரவரிசை நாடுகளின் செயல்திறனை மூன்று பிரிவுகளின் மீது வகைப்படுத்துகிறது.
முதலீடு மற்றும் வளர்ச்சி
கவர்கின்ற தன்மை
தயார்நிலை
இந்த மூன்று பிரிவுகளும் நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சில பரந்துபட்ட விஷயங்களில் வைத்து மதிப்பிடுகின்றன.
இந்த விஷயங்களுள் கல்வி, தொழிற்பயிற்சி, பணியிடப் பயிற்சி, மொழித்திறன், வாழ்க்கைச் செலவு, வாழ்க்கைத் தரம், சம்பள விகிதம் மற்றும் வரி விகிதங்கள் ஆகியன அடங்கும்.
ஆசியாவிற்கான சிறந்த இடத்திற்கு நடந்த கடுமையான போட்டியில் ஹாங்காங் சிங்கப்பூரை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது.
கண்டங்களைப் பொறுத்த சிறந்த திறன்வாய்ந்த பொருளாதார நாடுகளில் மொத்தமுள்ள 15 இடத்திற்கு ஐரோப்பாவின் 11 நாடுகள் இடம்பெற்று 2017-ம் ஆண்டிற்கான தரவரிசையில் ஆதிக்கம் செலுத்துகின்றன
இந்த வருடப்பட்டியலில் சுவிட்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகள் சிறந்த போட்டியாளர்களாக திகழ்கின்றன.