TNPSC Thervupettagam

உலக திறன் தரவரிசை 2017

November 22 , 2017 2560 days 922 0
  • சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் உலக திறன் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
  • 2017-ம் ஆண்டிற்கான இந்த திறன் தரவரிசை பட்டியலில் 63 நாடுகளுள் இந்தியா 51-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த தரவரிசை நாடுகளின் செயல்திறனை மூன்று பிரிவுகளின் மீது வகைப்படுத்துகிறது.
  1. முதலீடு மற்றும் வளர்ச்சி
  2. கவர்கின்ற தன்மை
  3. தயார்நிலை
  • இந்த மூன்று பிரிவுகளும் நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சில பரந்துபட்ட விஷயங்களில் வைத்து மதிப்பிடுகின்றன.
  • இந்த விஷயங்களுள் கல்வி, தொழிற்பயிற்சி, பணியிடப் பயிற்சி, மொழித்திறன், வாழ்க்கைச் செலவு, வாழ்க்கைத் தரம், சம்பள விகிதம் மற்றும் வரி விகிதங்கள் ஆகியன அடங்கும்.
  • ஆசியாவிற்கான சிறந்த இடத்திற்கு நடந்த கடுமையான போட்டியில் ஹாங்காங் சிங்கப்பூரை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது.
  • கண்டங்களைப் பொறுத்த சிறந்த திறன்வாய்ந்த பொருளாதார நாடுகளில் மொத்தமுள்ள 15 இடத்திற்கு ஐரோப்பாவின் 11 நாடுகள் இடம்பெற்று 2017-ம் ஆண்டிற்கான தரவரிசையில் ஆதிக்கம் செலுத்துகின்றன
  • இந்த வருடப்பட்டியலில் சுவிட்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகள் சிறந்த போட்டியாளர்களாக திகழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்