TNPSC Thervupettagam

உலக தைராய்டு (கேடய) தினம் – மே 25

May 26 , 2019 1953 days 589 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே 25 அன்று உலக தைராய்டு (கேடய) தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டு, உலக தைராய்டு விழிப்புணர்வின் 11-வது ஆண்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கின்றது.
  • உலக தைராய்டு தினம் அமெரிக்கத் தைராய்டு மன்றம் மற்றும் ஐரோப்பியத் தைராய்டு மன்றம் ஆகியவற்றின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 2008 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இத்தினமானது சர்வதேச அளவில் தைராய்டு நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் தற்பொழுதுள்ள புதிய சிகிச்சை முறைகள் பற்றி கவனம் செலுத்துவதையும் அவசரமாகத் தேவைப்படும் தடுப்புத் திட்டங்களின் மீது கவனம் செலுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • தைராய்டு என்பது கழுத்தின் மையத்தில் அமைந்துள்ள பட்டாம் பூச்சி வடிவிலான ஒரு சுரப்பியாகும். இது வளர்சிதைக்கான ஒரு சிறந்த சுரப்பியாகும்.
  • சிகிச்சை அளிக்கப்படாத ஹைப்போதைரோடிசம் கருவுறாமை மற்றும் இதய நோய் போன்ற கடுமையான நோய்களுக்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்