TNPSC Thervupettagam

உலக தைராய்டு தினம் - மே 25

May 30 , 2024 178 days 162 0
  • தைராய்டு சுரப்பியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், தைராய்டு நோய் உள்ளவர்கள் முறையாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை வசதிகளைப் பெறுவதையும் நாம் எவ்வாறு உறுதி செய்வது என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1965 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதியன்று, ஐரோப்பிய தைராய்டு சங்கம் நிறுவப்பட்டது.
  • இந்த அமைப்பு தான் உலக தைராய்டு தினத்தை முதலில் அங்கீகரித்தது.
  • கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பியான தைராய்டு சுரப்பி என்பது தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனைன் ஆகிய இரண்டு முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
  • குறைவான மற்றும் அதிகப்படியான அயோடின் காணப்படும் இரண்டு நிலைகளிலும் முறையே ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிம் என்ற பாதிப்புகள் ற்படும்.
  • சுமார் 4.2 கோடி இந்தியர்கள் தைராய்டு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, தொற்றா நோய்கள் (NCDs) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்