1969 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினம் சர்வதேசத் தொலைத் தொடர்பு ஒன்றியம் (ITU - International Telecom Union) உருவாக்கப்பட்டதைக் குறிக்கின்றது.
மேலும் இத்தினம் 1865 ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச தந்திப் பொறிப் பிரகடனத்தில் கையெழுத்திடப்பட்டதைக் குறிக்கின்றது.
இத்தினம் ITU-ன் தலைமைக் கருத்தரங்கினால் 1973 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தகவல் சமூகம் மீதான உலக மாநாடு மே 17 ஆம் தேதியை உலக தகவல் சமூக தினமாக அறிவிக்குமாறு ஐ.நா. பொதுச் சபையைக் கேட்டுக் கொண்டது.
2006 ஆம் ஆண்டு முதல் மே 17 ஆம் தேதியானது தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமுதாயம் ஆகிய இரண்டிற்கான தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினத்தின் கடைபிடிப்பானது இணையப் பயன்பாடு, தகவல் தொடர்புத் தொழில் நுட்பங்கள் ஆகியவை குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணுகின்றது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவானது, “தரநிலை இடைவெளியை இணைத்தல்” என்பதாகும்.
இந்தக் கருத்துருவானது பின்வருவனவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.
வளர்ச்சிக்காகத் தகவலின் வலிமை
சிக்கலானத் தரவுகளை செயல்படக்கூடிய தகவல்களாக மாற்றுவது.
தலைமைக் கருத்தரங்கு என்பது ITU அமைப்பின் 4 ஆண்டு கால செயல்திட்டம் குறித்து முடிவெடுக்கும் ITU-ன் கொள்கை வகுக்கும் உச்ச அமைப்பாகும்.