உலக தொழுநோய் தினம் – ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை
January 28 , 2019 2128 days 956 0
சர்வதேச அளவில் ஹன்சன் நோய் அல்லது தொழுநோய் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக தொழுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில் உலக தொழுநோய் தினம் ஜனவரி 27 ஆம் தேதி நிகழ்ந்தது. மேலும் இத்தினம் இந்தியாவில் ஜனவரி 30 (மகாத்மா காந்தியின் நினைவு தினம்) அன்று அனுசரிக்கப்படவிருக்கிறது.
இந்த ஆண்டின் இத்தினமானது குழந்தைகளில் தொழுநோய் தொடர்பான குறைபாடுகளற்ற (சுழியம்) இலக்கின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
மிகக் கொடுமை வாய்ந்த பழமையான இந்த நோய் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த தினமானது 1954 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கொடையாளர் மற்றும் எழுத்தாளரான ரோல் பூலரோ என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.