TNPSC Thervupettagam

உலக தொழுநோய் தினம்

January 29 , 2018 2490 days 1646 0
  • சர்வதேச அளவில் தொழுநோயைப் பற்றி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் தினம் (World Leprosy Day) கொண்டாடப்படுகின்றது.
  • மைக்கோ பாக்டீரியம் லெப்ரே எனும் பாக்டீரியாவினால் தொழுநோய் உண்டாகின்றது. இவை மனித உடலில் மிகவும் மெதுவாக பெருகவல்ல தொற்றுநோயாகும்.
  • குழந்தைகளில் தொழுநோயோடு தொடர்புடைய குறைபாடுகள் ஏற்படுவதை முற்றிலும் தடுப்பதே இந்த நாளினுடைய அனுசரிப்பின் முக்கிய நோக்கமாகும்.
  • தொழுநோயானது ஹான்சென் நோய் (HANSEN Disease) எனவும் அழைக்கப்படுகின்றது.
  • இது மனித இனத்திற்கு தெரிந்த பழமையான நோய்களில் ஒன்றாகும்.
  • தொழுநோயைப் பற்றி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1954ஆம் ஆண்டு பிரெஞ்ச் நாட்டின் கொடையாளரான (Philanthropist) ரவூல் பொல்லேரூ என்பவரால் இத்தினம் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்