இது தோல் நிறமி இழப்பு நோய் சார்ந்த உடல்நலம் மற்றும் கல்வியினை அளிப்பதற்கான முயற்சியை அதிகரிப்பது மற்றும் இந்த நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் எதிர்கொள்ளும் சமூக இழிவு மற்றும் மனநலம் சார்ந்த சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தோல் நிறமி இழப்பு நோய் என்பது மெலனின் உற்பத்தி செய்யும் மெலனோ சைட்டுகள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தினால் அழிக்கப்படுகின்ற ஒரு தோல் நோயாகும்.
இதனால் சருமம் அதன் நிறத்தை இழந்து, தோலில் வெண்மையான, வழுவழுப்பான திட்டுகள் ஏற்படும்.
தோல் நிறமி இழப்பு நோய் என்பது ஓர் அரிய நோயாகும் என்பதோடு இது உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தொகையில் சுமார் 1% அல்லது அதற்கும் அதிகமான நபர்களுக்கு ஏற்படலாம்.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "United by the Skin" or "Unidos Por La Piel" என்பதாகும்.