TNPSC Thervupettagam

உலக நகரங்களின் உச்சி மாநாடு

July 11 , 2018 2233 days 693 0
  • இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலக நகரங்களின் உச்சிமாநாட்டின் 6வது பதிப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது.
  • இதன் கருத்துரு “வாழத்தகுந்த மற்றும் நிலையான நகரங்கள்; புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் வருங்காலத்தினை தழுவுதல்”
  • இந்த உச்சி மாநாடு, சிங்கப்பூரின் சர்வதேச தண்ணீர் வாரம் மற்றும் சிங்கப்பூரின் தூய்மையான சுற்றுச்சூழல் மாநாடு ஆகியவற்றுடன் ஒருங்கே நடைபெற்றது.
  • சிறந்த ஆட்சிமுறை மற்றும் திட்டமிடுதல், தொழில்நுட்பம் மற்றும் புதிய சமூகக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் மூலம் வாழத் தகுந்த மற்றும் நெகிழ்திறன் வாய்ந்த நகரங்களை உருவாக்குவதற்கான வழிகளை அம்மாநாடு வெளிக் கொணர்ந்து உள்ளது.
  • பொது ஆட்சி முறை மற்றும் நகரங்களின் நிலையான மேம்பாடு ஆகியவற்றுக்கான இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சர்வதேச மாநாட்டுத் தொடர் இது ஆகும்.
  • இதன் முதல் உச்சி மாநாடு ஜூன் 2008-ல் சிங்கப்பூரில் நடைபெற்றது. இது “வாழத்தகுந்த மற்றும் துடிப்பான நகரங்கள்” என்ற கருத்துருவில் கவனம் செலுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்