TNPSC Thervupettagam

உலக நகரங்கள் அறிக்கை 2024

November 10 , 2024 19 days 93 0
  • சமீபத்தில், UN-வாழ்விட அமைப்பானது ‘World Cities Report 2024: Cities and Climate Action’ என்ற அறிக்கையினை வெளியிட்டது.
  • 2040 ஆம் ஆண்டில், நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் இரண்டு பில்லியன் மக்கள் 0.5 டிகிரி வெப்பநிலை உயர்வை எதிர்கொள்வார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள பல்வேறு நகரங்களுக்குப் பருவநிலை நெகிழ் திறன் கொண்ட அமைப்புகளை உருவாக்க மற்றும் பராமரிக்க ஆண்டிற்கு 4.5 முதல் 5.4 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும்.
  • அதற்காக தற்போது வழங்கப்படும் நிதியுதவி வெறும் 831 பில்லியன் டாலர் மட்டுமே ஆகும்.
  • 1990 ஆம் ஆண்டில் சுமார் 19.5 சதவீதமாக இருந்த உலகளவில் நகர்ப்புறங்களில் உள்ள பசுமை இடங்களின் சராசரிப் பங்கு ஆனது 2020 ஆம் ஆண்டில் 13.9 சதவீதமாகக் குறைந்தது.
  • 2040 ஆம் ஆண்டில், சுமார் 2,000க்கும் அதிகமான நகரங்கள் கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டருக்கும் குறைவான உயர கடலோரப் பகுதிகளில் காணப்படும்.
  • 1975 ஆம் ஆண்டு முதல் வெள்ளப் பாதிப்பு ஆனது கிராமப்புறங்களை விட நகரங்களில் 3.5 மடங்கு வேகமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்