சமீபத்தில், UN-வாழ்விட அமைப்பானது ‘World Cities Report 2024: Cities and Climate Action’ என்ற அறிக்கையினை வெளியிட்டது.
2040 ஆம் ஆண்டில், நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் இரண்டு பில்லியன் மக்கள் 0.5 டிகிரி வெப்பநிலை உயர்வை எதிர்கொள்வார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நகரங்களுக்குப் பருவநிலை நெகிழ் திறன் கொண்ட அமைப்புகளை உருவாக்க மற்றும் பராமரிக்க ஆண்டிற்கு 4.5 முதல் 5.4 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும்.
அதற்காக தற்போது வழங்கப்படும் நிதியுதவி வெறும் 831 பில்லியன் டாலர் மட்டுமே ஆகும்.
1990 ஆம் ஆண்டில் சுமார் 19.5 சதவீதமாக இருந்த உலகளவில் நகர்ப்புறங்களில் உள்ள பசுமை இடங்களின் சராசரிப் பங்கு ஆனது 2020 ஆம் ஆண்டில் 13.9 சதவீதமாகக் குறைந்தது.
2040 ஆம் ஆண்டில், சுமார் 2,000க்கும் அதிகமான நகரங்கள் கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டருக்கும் குறைவான உயர கடலோரப் பகுதிகளில் காணப்படும்.
1975 ஆம் ஆண்டு முதல் வெள்ளப் பாதிப்பு ஆனது கிராமப்புறங்களை விட நகரங்களில் 3.5 மடங்கு வேகமாக அதிகரித்துள்ளது.