இந்த நாள் 1817 ஆம் ஆண்டில் முதன்முதலில் நரம்பியக் கடத்தல் (நியூரான் சிதைவு) கோளாறைக் கண்டறிந்த டாக்டர் ஜே பார்கின்சனின் பிறந்தநாளை குறிக்கிறது.
உலக நடக்குவாத நோய் தினம் முதன்முதலாக 1997 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
உலக நடக்குவாத நோய் தினமானது உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய பார்கின்சன் (முடக்குவாத) நோய் சங்கம் (EPDA) ஆகிய அமைப்புகளின் பெரும் ஒரு ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது.
முடக்குவாத நோய் என்பது மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு நாள்பட்ட சிதைவுக் கோளாறு ஆகும் என்ற நிலையில், இது நரம்பு இயக்கவியல் அமைப்பு மற்றும் நரம்பு இயக்கவியல் அல்லாத அமைப்புகளை பாதிக்கிறது.
2024 ஆண்டிற்கான கருத்துரு என்பது – ‘நடக்குவாத நோயுடன் சிறப்பாக வாழ்வதை ஊக்குவித்தல்’ ஆகும்.