சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவானது தற்பொழுது சர்வதேச அளவில் பெரிய நன்னீர் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறித்து ஆய்வு செய்துள்ளது.
1970 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை சர்வதேச அளவில் பெரிய நன்னீர் விலங்குகளின் எண்ணிக்கையானது 88 சதவிகித அளவிற்குக் குறைந்துள்ளது. கடல் அல்லது நிலத்தில் வாழும் முதுகெலும்புள்ள விலங்குகளின் இழப்பு இருமடங்காகும்.
பெரிய மீன் இளங்கள் அச்சுறுத்தல் நிலையில் இருக்கின்றன. உதாரணம் ஸ்டர்ஜியான்ஸ், சாலமோன் மீன்கள், பெரிய கெளுத்தி மீன்கள்
பாய்ஜி என்ற சீன நதி டால்பினானது (ஓங்கில்) மனிதர்களின் நடவடிக்கையால் அழிந்து போகும் முதலாவது டால்பின் இனமாக இருக்கின்றது.
அவற்றிற்கான இரண்டு முக்கியமான அச்சுறுத்தல்கள் பின்வருமாறு