உலக நாடுகளின் கடன் குறித்த ஒரு வட்டமேசை மாநாடானது பெங்களூரு நகரில் நடைபெற்றது.
இது இந்தியா, உலக வங்கி மற்றும் சர்வதேசச் செலாவணி நிதியம் ஆகியவற்றால் இணைந்து தலைமை தாங்கி நடத்தப் பட்டது.
சரியான நேரத்தில் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையினை மேற்கொள்வதற்கு இடையூறாக இருக்கும் சிக்கல்களைப் பற்றி விவாதிப்பதற்காக வேண்டி முக்கியப் பங்குதாரர்களை இது ஒன்றிணைக்கிறது.
அரசுகளின் (இறையாண்மை) கடன் என்பது ஒரு நாட்டின் அரசாங்கம் ஆனது ஒரு நிதி நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கடனாகும்.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.