TNPSC Thervupettagam

உலக நாடுகளின் கடன் - 2022

July 19 , 2023 496 days 273 0
  • பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள உலக அரசாங்கங்கள் கடன் வாங்கியதால், உலக நாடுகளின் பொதுக் கடன் மதிப்பானது 2022 ஆம் ஆண்டில் 92 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.
  • கடந்த இருபது ஆண்டுகளில் உலக நாடுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மதிப்பானது ஐந்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
  • உலக நாடுகளின் அரசாங்கக் கடனில் வளர்ந்து வரும் நாடுகளின் பங்கு கிட்டத்தட்ட 30% ஆக உள்ள நிலையில், இதில் 70 சதவீதப் பங்கானது சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் கடன் மதிப்பாகும்.
  • 51 வளர்ந்து வரும் நாடுகளானது, அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதமானது அதிக அளவிலான கடனைக் குறிக்கின்ற 60% வரம்பிற்கு மேல் கொண்டு உள்ளன.
  • ஆப்பிரிக்காவில், கல்வி அல்லது சுகாதாரத்திற்காகச் செலவிடும் ஒரு தொகையைக் காட்டிலும் வட்டிக் கொடுப்பனவுகளுக்குச் செலவிடப்படும் தொகை மிக அதிகமாக உள்ளது.
  • பத்திரதாரர்கள் மற்றும் வங்கிகள் போன்ற தனியார் கடன் வழங்கு நிறுவனங்கள், வளர்ந்து வரும் நாடுகளின் மொத்த வெளிநாட்டுப் பொதுக் கடனில் 62% பங்கினைக் கொண்டுள்ளன.
  • ஆப்பிரிக்காவில், 2010 ஆம் ஆண்டில் 30% ஆக இருந்த இந்தக் கடன் வழங்கு நிறுவனங்களின் பங்கானது 2021 ஆம் ஆண்டில் 44% ஆக உயர்ந்துள்ளது.
  • லத்தீன் அமெரிக்கா 74% என்ற அளவில், வெளிநாட்டு அரசாங்கக் கடனை வைத்து இருக்கும் தனியார் கடன் வழங்கு நிறுவனங்களின் அதிகபட்ச விகிதத்தைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்