உலக நாடுகளின் போக்குகள்: 2022 ஆம் ஆண்டில் ஒரு வலுக்கட்டாயமான வகையிலான புலம்பெயர்வு
June 17 , 2023 527 days 287 0
உலக நாடுகளின் போக்குகள்: 2022 ஆம் ஆண்டில் வலுக்கட்டாயமான வகையிலான புலம்பெயர்வு அறிக்கை எனப்படும் ஒரு வருடாந்திர அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையினால் வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் 108.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வலுக் கட்டாயமாக புலம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களில் 30 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர்.
2023 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 110 மில்லியனாக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு முழுவதிலும் ஏற்பட்ட பருவநிலை சார்ந்த பேரழிவுகள் 32.6 மில்லியன் மக்களின் உள்நாட்டு புலம்பெயர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 8.7 மில்லியன் பேர் அந்த ஆண்டின் இறுதிக்குள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப இயலவில்லை.
2022 ஆம் ஆண்டில் பதிவான அனைத்து வகை புதியப் புலம்பெயர்வுகளில் பாதிக்கும் மேற்பட்டவை (54 சதவீதம்) பேரழிவு தொடர்பான உள்நாட்டுப் புலம்பெயர்வுகள் ஆகும்.
மோசமான மேம்பாட்டுக் குறிகாட்டிகளைக் கொண்ட 46 நாடுகள் அல்லது குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள் உலக அகதிகளின் எண்ணிக்கையில் 20 சதவீத்தினைக் கொண்டுள்ளன.
2021 ஆம் ஆண்டினை விட கடந்த ஆண்டில் 19.1 மில்லியன் மக்கள் தங்கள் சொந்தப் பகுதிகளை விட்டு வெளியேற்றப் பட்டனர்.