TNPSC Thervupettagam

உலக நாடுகளில் உள்ள ஏரிகளின் நீர் சேமிப்பு கொள்ளளவுகளில் குறைவு

May 24 , 2023 423 days 262 0
  • இந்த ஆய்வானது, 1992 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான ஒரு காலக் கட்டத்தில் இந்த நீர்நிலைகளில் 53 சதவீத நீர்நிலைகளின் சேமிப்பு கொள்ளளவில் ஏற்பட்ட குறைவு குறித்த புள்ளியியல் ரீதியான தகவல்களைக் கண்டறிவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகின் மிகப்பெரிய ஏரிகள் மற்றும் பல நீர்த்தேக்கங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வறண்டு வருகின்றன.
  • உலகின் நீரியல் பரப்பு சார்ந்த நன்னீர் நீரில் 87 சதவீதத்தினைக் கொண்டுள்ள இந்த ஏரிகளை பருவநிலை மாற்றம் மற்றும் மனிதச் செயல்பாடுகள் மிகப்பெரிய ஆபத்தில் ஆழ்த்துகின்றன.
  • 53 சதவீத ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில், ஆண்டிற்கு சுமார் 22 ஜிகா டன்கள் என்ற வீதத்தில் நீர்ச் சேமிப்பு கொள்ளளவு குறைந்துள்ளதாக இந்த ஆய்வின் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • முழு ஆய்வுக் காலத்திலும், 603 கன கிலோமீட்டர் நீர் இழக்கப் பட்டுள்ளது.
  • இது மீட் ஏரியில் உள்ள நீரின் அளவை விட 17 மடங்கு அதிகமாகும்.
  • மீட் ஏரியானது, அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்