TNPSC Thervupettagam

உலக நாடுகள் மக்கள் தொகை அறிக்கை

April 25 , 2019 1947 days 567 0
  • ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியமானது (United Nations Population Fund’s- UNFP) 2019 ஆம் ஆண்டிற்கான உலக நாடுகளின் மக்கள் தொகை அறிக்கையை (State of the World: Population Report) வெளியிட்டது.
  • இது இந்தியாவின் மக்கள் தொகையானது 2010 மற்றும் 2019 ஆம் ஆண்டு கால அளவில் சராசரியாக வருடத்திற்கு 1.2% உயர்ந்துள்ளது என குறிப்பிடுகிறது.
  • இது சீனாவின் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை விட இரு மடங்கு அதிகமாகும்.
  • இந்த அறிக்கையானது முதன்முறையாக கீழ்க்காணும் மூன்று முக்கிய அளவீடுகளில் பெண்களின் ( 15-49 வயதிற்குட்பட்ட) முடிவெடுக்கும் திறனையும் உள்ளடக்கியுள்ளது.
    • அவர்கள் இணையுடன் பாலியல் உறவு
    • கருத்தடைப் பயன்பாடு
    • சுகாதாரப் பராமரிப்பு
  • மகப்பேறு மற்றும் பாலியல் உரிமைகள் இல்லாமையானது பெண்களின் கல்வி, வருமானம் மற்றும் பாதுகாப்பின் மீது எதிர்மறையான விளைவுகளைப் பெருமளவில் ஏற்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்